விவசாயிகளின் குறைதீர்த்த துணை முதல்வர் – நன்றி தெரிவித்த கிராம மக்கள்

Arasiyalkannadi

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 கிராம மக்களின் நீண்டநெடிய நாட்கள் கனவை நிறைவேற்றியுள்ளார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உள்ள தம்பி நாயக்கன் பட்டி, டி.மீனாட்சி புரம், ஏரணம்பட்டி, கோனாம்பட்டி, திம்மிநாயக்கன் பட்டி, ஈ.புதுக்கோட்டை, பொட்டி புரம், ராசிங்காபுரம், சின்ன பொட்டி பரம், சிலைமலை, சில்லமரத்து பட்டி, தர்மத்து பட்டி ஆகிய கிராமங்களில் பருவமழையை நம்பியே பயிர் சாகுபடி செய்ய வேண்டிய இருப்பதால் மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வந்துள்ளது,

இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த விவசயிகள் மற்றும் கிராம மக்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வதிடம் 18 ஆம் கால்வாயை நீடித்து தந்து இப்பகுதியில் உள்ள சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகள் நிலம் பயன் பெற கோரிக்கை விடுத்தனர்.

விவசயிகளின் கோரிக்கையை ஏற்ற கொண்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 2018 ஆம் ஆண்டு சுமார் 51கோடி ரூபாய் செலவில் 18 ஆம் கால்வாயை நீடித்து உதவி செய்துள்ளார். இதனால் கிராம மக்கள் அனைவரும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

You may like

In the news
Load More
ads