டி.ஜி.பி. திரிபாதி அவர்களுக்கு ஒரு அனுபவ அதிகாரியின் பதில்!

Arasiyalkannadi

குற்ற வழக்கு இறுதி அறிக்கையில் என்னென்ன இருக்கணும் கமிஷனர்கள்.. ஐ.ஜி.,களுக்கு டிஜிபி சுற்றறிக்கை.. என்ற தலைப்பில் நேற்று (24 செப்டம்பர்)  ஈரோடு தினமலர் பதிப்பில் செய்தி வெளிவந்துள்ளது.

இது காவல்துறை வட்டாரத்திலும், நீதிமன்ற வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம்.
டி.ஜி.பி. கூறிய அறிவுரைகளே..!

அவர் கூறிய அறிவுரைகளில், குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போது. விடுபட்டுள்ள குற்றவாளிகளின் பெயர் உள்பட பல்வேறு நடைமுறைகளை சரிபார்த்த பின்னரே கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மேலும் பல அடிப்படையான ஆரம்பகட்ட அதாவது பிள்ளையார் சுழி என்பார்களே அதுபோன்ற சட்டம் ஒழுங்கு நடவடிக்கை தகவல்களை அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் அனைத்து மண்டல ஐ.ஜி களுக்கு அறிவுரை அறிக்கை அனுப்பியுள்ளார் டிஜிபி திரிபாதி.

இது ஆரம்ப கல்வி பயிலும்.. L.K.G.. U.K.G.. மாணவர்களுக்கு கூறும் அறிவுரை போல் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள். தங்களது காவல்துறை மீதான கருத்துக்களை பற்றி சிலேகித்தனர்..

இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறையில் அனைத்து விதமான குற்றவாளிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து ஓய்வுபெற்ற கே.கே. முத்துசாமி- ஏ.எஸ்.பி அவர்களிடம் கருத்து கேட்டோம்.

அவரிடம் இது பற்றி கருத்து கேட்ட  காரணம் என்னவென்றால் அவர் அதிகாரியாக உயர் பதவியில் இருந்தபோது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வானளாவிய அதிகாரத்தின் பின்னணியில் இருந்த சசிகலா.. தனது கொழுந்தனாரின் வேண்டுகோளிற்க்கு இணங்க  அதாவது சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி பழனிவேல்.


பழனிவேல் அன்று காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பின்னர் பழனிவேல் முதல்வர் ஜெயலலிதாவின் கருப்பு பூனையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பழனிவேல்… கே.கே முத்துசாமி மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பின் காரணமாக…
கே.கே முத்துச்சாமி அவர்களை பழி வாங்கும் நோக்கத்தில்… போலீஸ் பயிற்சி பள்ளி, மற்றும் In Service Training  Center மையத்திற்கு இடமாற்றம் செய்து மகிழ்ந்து கொண்டார்… அது ஒரு பெரும் தனிக்கதை..

எனவே தான்  போலீஸ் பயிற்சி பள்ளி,  மற்றும் In Service Training  Centerகளில்….. விரிவுரையாளராக இருந்து நல்ல அனுபவம் பெற்ற..
கே.கே முத்துச்சாமி அவர்களிடம் இந்தக் கேள்வியை… அதாவது போலீஸ் கமிஷனர்கள்.. ஐ.ஜி.,களுக்கு டிஜிபி.. அவர்கள் கூறிய அறிவுரையான குற்ற வழக்கு இறுதி அறிக்கையில் என்னென்ன இருக்கணும் என்பதைப்பற்றி கேள்விகளைக் கேட்டால் சரியாக இருக்கும் என்ற  இந்த கேள்வியை…
கே.கே முத்துச்சாமி அவரிடம் நம்மை கேட்பதற்கு தூண்டியது.

அதற்கு அவர் அளித்துள்ள விவரமான பதில் என்னவென்றால்….
DGP அவர்களின் இந்த அறிக்கை என்னை வியப்படையச் செய்கிறது.குற்ற வழக்கில் என்னென்ன ஆவணங்களைச் சரிபார்த்து , இணைத்து கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் யார்யாரை சாட்சியாகப் போட வேண்டும் போன்றவையே இதன் சாராம்சம். இவையெல்லாவற்றையும் போலீஸ் பயிற்சி பள்ளி, கல்லூரி மற்றும் In Service Training  Centerகளிலும் விலாவரியாகச் சொல்லித்தரப்படுகிறது.

கற்றுக் கொடுத்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்.

அதுவும் Zonal IG க்கள்,காவல் ஆணையர்கள் போன்ற பெரிய அதிகாரிகளுக்கு இந்த அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன.

இதெல்லாம் தெரியாமலா அவர்கள் அவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருக்கமுடியும்? அதுவும் அரசு வழக்குரைஞர் மேற்பார்வையில் தயார் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கைகளில் எந்த ஆவணமும் விட்டுப்போக வாய்ப்பே இல்லை. நான் ஓய்வு பெற்று 24 வருடங்கள் ஆகிவிட்டது.

ஒருவேளை இத்தனை குறைபாடுகளுடன் தான் தற்போதைய விசாரணைமுறை உள்ளதோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.முன்பு முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் அவ்வளவு திறமையாக வழக்கு விசாரணை செய்வார்களாம். தண்டனைக்கென்றும் விடுதலைக்கெண்றும் கூட தனித்தனி விசாரணை உண்டாம் . I.G அருள் அவர்கள் அந்த ஊரிலிருந்து யாரையும் காவலராகத் தேர்வு செய்யக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தாராம்.

இதை நான் சாத்தூரில் ஆறு மாத பயிற்சியிலிருந்தபோது ஆய்வாளர் ராஜாசிங் அவர்கள்( later SP) அந்த வகை நபர்களிடம் ஐடியா எதுவும் கேட்க்காதே என எச்சரித்தது ஞாபகத்துக்கு வருகிறது . நான் விசாரித்த அல்லது மேற்பார்வையிட்ட எந்த வழக்கையும்  தண்டனை பெற கோர்ட்டில் பெரும் போராட்டமே நடத்தியதுண்டு.நான் மதிக்கும் வக்கீல் திரு. KA.ராமச்சந்திரன் அவர்கள் என்னுடன் கோட்டில் சண்டை போட்ட நிகழ்வுகளும் உண்டு.

நான் நடத்திய சில வழக்குகளைக் கையாண்ட திரு.KV.வெங்கட்ராமன் அவர்கள் தற்போது டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். சமீபத்தில் நான் பதிவிட்ட தேவாரம் IPS அவர்களின் கடிதத்திற்கு அவர் கொடுத்த கமெண்ட்: Superb admiration from the Head of your department.Congratulations.It was a pleasure to prosecute cases investigated by you Sri KKM. அவர் என்னுடைய வழக்கு விசாரணையைப் பாராட்டியது  மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எந்த ஒரு புகாரையும் ஏற்று FIR or CSR போடவேண்டும்,உண்மையான லஞ்சப் புகாருக்கு டிஸ்மிஸ் ஒன்று தான் முடிவு, ரௌடிகள், கூலிப்படையினர், செயின் பறிப்போர், போதைப்பொருள் தயாரிப்பு , கடத்தல் பொருள் விற்போர் போன்ற கொடுங்குற்றவாளிகளின் கொட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் , பதவி உயர்வு ,மாறுதல் போன்றவற்றுக்கு சிபாரிசு கூடாது (Thanks to BPR DGP) அரசியல் வாதிகள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது தேவையில்லாமல் யாரையும் அடக்கக்கூடாது, நீ ஒருவனை அடிப்பது பொதுமக்களே பாராட்டும்படியானதாக இருக்கவேண்டும் போன்ற அறிவுரைகளை அறிக்கையாக வெளியிடுங்கள் நேர்மையாளர் என்று பெயரெடுத்துள்ள DGP அவர்களே !

என்று தனது பதிலில் கூறியுள்ளார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கே.கே. முத்துச்சாமி..!

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

You may like

In the news
Load More
ads