வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து சாத்தான்குளத்தில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

Arasiyalkannadi

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி சாத்தான்குளத்தில் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து வாசகசாலை பஜாரில் நடந்த திமுக கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார்.

ஒன்றிய மதிமுக செயலாளர் பலவேசபாண்டியன் வட்டார காங்.கமிட்டி தலைவர் ஜெனார்த்தனம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் ஜெயராமன மார்ச்சிட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுந்தர கணபதி நகர மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் உசேன் ஒன்றிய வலது கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து திமுக பிரமுகர்கள் இந்திராகாசி பசுபதி அலெக்ஸ் பிரிட்டோ பன்னம்பாறை நயினார் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் வேனுகோபால் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி நிர்வாக குழு உறுப்பினர் கிருணராஜ் மாவட்ட மதிமுக கலைபிரிவு செயலாளர் மகராஜன் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் தருவை சுகுமாறன் மார்ச்சிட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால்ää ஒன்றிய மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தௌலபிக் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்துதலைவரும் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான தினராஜசிங் ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் அந்தோணிராஜ் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய பொருளார் தாழை சுந்தர் நகர மதிமுக செயலாளர் ஜெயராஜ் நகர வலது கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜகோபால் ஒன்றிய திமுக பொருளாளர் வேல்துரை மாவட்ட பிரதிநிதி சரவணன் ஒன்றிய மதிமுக மாணவரணி செயலாளர் ரவிசந்திரன் உட்பட கூட்டணி கட்சியினர் 250பேர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன.

நிறைவில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


செய்திகள்:- பேய்குளம் முருகன்

You may like

In the news
Load More
ads