தேசிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் தேவர் திருஉருவ சிலைக்கு வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெருளாளராக உள்ள மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேவர் திருமகனார் நினைவாலயக் காப்பாளர் க.காந்திமீனாள் நடராஜத் தேவர் ஆகியோரால் இன்று (23:10:2020) கையெப்பம் இட்டு பெற்று கொள்ளப்பட்டது. தங்க கவசமானது தேவர் திருவுருவ சிலையில் (23:10:2020) முதல் (01:11:2020) வரை அணிவிக்கப்பட்டு (02:11:2020) அன்று மீண்டும் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்த நிகழ்வின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சினிவாசன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சி தலைவர் மரு.டி.ஜி.வினய்,இ.அ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), கே.மாணிக்கம் (சோழவந்தான்), பி.பெரியபுள்ளான் (மேலூர்), எஸ் எஸ் சரவணன் (மதுரை தெற்கு), மணிகண்டன் (ராமநாதபுரம்), சதன் பிரபாகர் (பரமக்குடி), ஆகியோர் கலந்து கொண்டனர்.