தங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும்!

Arasiyalkannadi

கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,பின்னல்வாடி ஊராட்சி செயலர் ராஜகண்ணு…

முன்களப்பணியாளராக கடந்த 06 மாத காலமாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அரசு மருந்துவமனையில் கொரனா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார்.

அரசு பணியாளர் ஒருவர் பணியில் இருக்கும்போது கொரோனா தொற்றின் காரணமாக இறந்துவிட்டார் என்றால்.

இறந்த அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசாங்கத்தில் பல சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு..!

அந்த சிறப்பு சலுகை இறந்த நபருக்கு சென்று விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தில்  மருத்துவ துறை அரசு மருத்துவர்கள் இவருக்கு கொரனா தொற்று இல்லை.

வெறும் சந்தேகம் தான் என கூறி கணக்கை முடிக்க மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

அரசு மருத்துவர்களின் இந்த அலட்சியப்போக்கு காண முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்…

ஆகியோர் வலைதளங்களில் ஒரு செய்தியை பதிவிட்டார்கள் அதில் அவர்கள் கூறியுள்ளதாவது..

அரசு மருத்துவர்கள் கொரோனா சான்றோடு உடலை வழங்கும் வரை..! நமது ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கமும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கமும் ஒருக்காலும் உடலை பெற விடாது என்றும்..

உள்ளதை உள்ளபடி கொரோனா பாதிப்பால் இறந்தார் என  சொன்னால் ஒரு முன்களப்பணியாளர் குடும்பம் இறப்புக்கு பிறகான பலன்களை பெறும்..அதனை தடுக்கும் வேலையில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்

மீறிய அடக்குமுறைகளை பயன்படுத்தினால் அமைப்பே நீதிமன்றம் சென்று மறு உடல்கூறு பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்தப் பதிவில் பதிவிட்டனர்…!

இந்த பதிவு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களின் கைப்பேசியில் பரபரப்பு செய்தியாக பதிவிறக்கமாகியது…!

இந்த தகவல் அறிந்த மருத்துவ உயர் அதிகாரிகள் பதறிப்போய் நிலைமை மோசமாகி விடக்கூடாது என்கின்ற காரணத்தை முன்னிறுத்தி…

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,பின்னல்வாடி ஊராட்சி செயலர் ராஜகண்ணு… கொரோனா நோய் தொற்று  காரணமாகவே இறந்தார் என்று இறப்பு சான்று வழங்கி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற தாரக சொல்லுக்கு இணங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இந்த மருத்துவமனை பிரச்சனைக்காக முன்னின்று குரல் கொடுத்த முன்னணி நிர்வாகிகளுக்கும் தலைவர்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…!

செய்திகள் : சங்கரமூர்த்தி தலைமை செய்தியாசிரியர்

You may like

In the news
Load More
ads