ஊராட்சி மன்றத்தின் தீர்மானம் இல்லாமல், டெண்டர் விட இடைக்கால தடை ! உயர் நீதிமன்றம்!

Arasiyalkannadi

14வது நிதிக்குழு பரிந்துரையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட நிதியினை ஊராட்சி மன்றங்கள் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பணிகளை முடிவு செய்து செயல்படுத்த விடாமல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களே தன்னிச்சையாக பணிகளை முடிவெடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடும் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவி ருக்மணி குமரேசன், தன்னுடைய ஊராட்சியில் 14வது நிதிக்குழு மான்ய நிதி ரூ.13 லட்சம் உள்ளது என்றும், அதனை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு உடனடித்தேவையாக உள்ள பணிகளை செய்யவிடாமல், மன்னார்குடி ஒன்றிய,
வட்டார வளர்ச்சி அலுவலர் தன்னிச்சையாக ஒரு பணியை தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் மூலம் டெண்டர் விட முயற்சி செய்து, ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தினை பறிக்கும் வகையில் செயல்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டு.
ஆகவே, அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு தடைகோரி தாக்கல் செய்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஊராட்சி மன்றத்தின் தீர்மானம் இல்லாமல், அதிகாரிகள் டெண்டர் விட இடைக்கால தடை விதித்து உத்தரவு.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, கிராம ஊராட்சி தனிப்பட்ட சட்ட பூர்வ அமைப்பு என்றும், அரசாணையின் படியும், வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், ஊராட்சிகளுக்குத்தான் 14வது நிதிக்குழுவின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதால் மனுதாரரின் கோரிக்கையில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டு இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்…!

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

You may like

In the news
Load More
ads